பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஏழு வாரங்களை கடந்துள்ளது. இதில் மொத்தமாக 20 பேர் பங்கேற்று இருந்தனர். தற்போது இந்த போட்டியில் இதுவரையில் 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இறுதியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து கெமி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில், இந்த வீட்டில் இருந்து வெளியேற இரண்டு நபர்களை தேர்வு செய்யுமாறு பிக் பாஸ் அறிவித்தார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு காரணங்களுடன் சக போட்டியாளர்களை நாமினேட் செய்ய தொடங்கினர்.

அதன்படி, கணவன் மனைவியா விட்டுக் கொடுக்காமல் விளையாடுகிறார்கள் என்று சாண்ட்ரா, பிரஜினை கனி, வினோத் மற்றும் அரோரா ஆகியவர்கள் நாமினேட் பண்ணுகிறார்கள்.
பின்பு அமித், திவ்யாவை நாமினேஷன் செய்கின்றார். தேஞ்ச ரெக்கார்ட் போல ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுவாங்க என வியானா திவ்யாவை சொல்ல, பார்வதியை சபரியும் கனியும் நாமினேட் செய்கின்றனர்.
மேலும் எல்லாரையும் திசைதிருப்பி விடுறாங்க என பார்வதியும், இதுவரைக்கும் அவர் ஒண்ணுமே பண்ணல என FJ வையும் நாமினேட் செய்கின்றனர்.
Listen News!