பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக வருகிறது. இந்த சீசன் ஆரம்பத்தில் டல்லாக இருந்தாலும், வார இறுதியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எபிசோட் அவற்றை சரி செய்யும் வகையில் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து விடும்.
அந்த வகையில் சண்டே எபிசோடில் சாண்ட்ராவை கதற விட்டு வேடிக்கை பார்த்துள்ளார் விஜய் சேதுபதி. இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக வெளியே செல்லும் போட்டியாளர்களின் பெயர் சனிக்கிழமை வெளியாகிவிடும்.
அதன்படி கெமி எலிமினேட் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனாலும் சண்டே எபிசோட்டில் ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் விஜய் சேதுபதி. அதில் பிரஜினும் கெமியும் தனித்தனி மாருதி சுசுகி காரில் ஏற வேண்டும். அதில் ஒரு கார் மீண்டும் வீட்டிற்குள் வரும். இன்னொரு கார் அப்படியே வெளியே சென்று விடும். அவர் எலிமினேட் ஆகி விட்டார் என்பது அர்த்தம் என்று கூறப்பட்டது.

இதன்போது பிரஜின் காரில் ஏறி வெளியே செல்ல, சாண்ட்ரா கதறி கதறி அழுத காட்சிகள் வைரலானது. ஆனாலும் ஒரு சிலர் பிரஜின் அவருடைய குழந்தைகளை பார்க்கப் போகின்றார் என்று சந்தோஷப்படலாம் தானே.. சாண்ட்ரா ஏன் இப்படி நடிக்கிறாங்க என்பது போல் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் பிரஜின் வந்துள்ளார். ஆனால் கெமி எலிமினேட்டாகி வெளியே சென்றுள்ளார். பிரஜின் வீட்டிற்குள் வந்ததும் அவரைப் பார்த்து கதறி அழுத சாண்ட்ரா, ஒரு கணம் மயக்கம் அடைந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
Listen News!