• Feb 05 2025

பத்மபூஷன் அஜித்தே..! ஆக்சன்ல பெரிய சம்பவம் இருக்கு மக்களே..! வெளியான அப்டேட்ஸ்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

லாகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். மேலும் இதில் அஜித் உடன் த்ரிஷா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவிலேயே காணப்படுகிறது.

கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் குட் பேட் அக்லி  திரைப்படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக காணப்படுகிறது.


இந்தத் திரைப்படம் நாளைய தினம் உலக அளவில் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் புக்கிங் மட்டும் லட்ச கணக்கில் விற்பனையாகி வருகின்றது.இதனால் கோட் படத்தின் சாதனையை விடாமுயற்சி திரைப்படம் முறி அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் ரிலீஸை முன்னிட்டு அடிக்கடி படம் தொடர்பிலான போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றது. தற்போது அர்ஜுனுடன் அஜித் மோதும் வகையிலான போஸ்டர் ஒன்றையும், சிறப்பு பாடல் ஒன்றையும்  வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

இதனால் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனனுக்கு முக்கிய ரோல் காணப்படும் எனவும், பக்கா மாஸ் படமாக விடாமுயற்சி ரிலீஸாக  உள்ளது எனவும் அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். அத்துடன் அஜித்துக்கு பெரிய அளவிலான கட்டவுட் வைத்து   திருவிழாவுக்கு தயாராகி வருகின்றனர் தல ரசிகர்கள்..

Advertisement

Advertisement