விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் தான் சௌந்தர்யா. இவருடைய குரல் சற்று கரராக காணப்பட்டாலும் இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை தட்டி சென்று வெற்றி பெற்றார்.
இதற்கு இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ப்ரீஸ் டாஸ்க்கில் அவருடைய நண்பராக விஷ்ணு உள்ளே சென்று இருந்தார். ஆனால் அங்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார் சௌந்தர்யா. இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக காணப்பட்டது. அவரும் சௌந்தர்யாவின் காதலை ஏற்றுக் கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவற்ற பிறகு அவர்கள் அளித்த பேட்டியில், இந்த வருடத்திற்கு உள்ளையே தாங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் வேற மாதிரி ஆபீஸ் வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கும் போதே நெருக்கமாக பழகியுள்ளார்கள்.
இந்த நிலையில், சௌந்தர்யா பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு அங்கு விஷப்பரிட்சை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது.
அதாவது குறித்த நிகழ்ச்சியில் அவருடைய கண்களை கட்டி ஒரு கண்ணாடி பெட்டிக்குள் குட்டி முதலை ஒன்றை வைத்து அதனை தொட்டு பார்த்து என்னவென்று சொல்ல சொல்லி கேம் வைத்து உள்ளார்கள்.
ஆரம்பத்தில் அதனை தொட்டு பார்த்த சௌந்தர்யா அது பாம்பு என நினைத்து கதறியுள்ளார். ஆனாலும் அதற்குப் பிறகு அதை தூக்க முயற்சித்தார்.
எனினும் ஒரு கட்டத்தில் தனது கண்ணை திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குட்டி முதலையை பார்த்து பதறி அடித்து ஓடியுள்ளார். இதன் போது அங்கு இருந்த தொகுப்பாளினி அது ரப்பர் என சொல்லி சமாளித்துள்ளார். அதற்கு சௌந்தர்யா எனக்கு பேன்ஸ் கூட்டிட்டு என்று என்ன கொல்ல பாக்குறீங்களா என கலக்கலாக பேசியுள்ளார்.
Listen News!