இந்திய சினிமாவில் பல நடிகர்கள், மற்றும் கலைஞர்கள் தங்கள் தனித்துவமான பங்களிப்புகளால் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தர்மேந்திரா (தரம் சிங் தியோல்) எனும் நடிகரின் பெயர் என்றும் ரசிகர்களின் மனதில் நிலையாக நிற்கும் பெயராகும்.

இன்று, 89வது வயதில் இந்த பாலிவுட் லெஜண்ட் காலமானார் என்று குடும்பம் மற்றும் திரை உலகம் அறிவித்தது. இதனால் இந்திய சினிமா மற்றும் ரசிகர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர்.
தர்மேந்திரா தனது வாழ்க்கையை முழுமையாக இந்திய சினிமாவுக்கே அர்ப்பணித்தார். அவர் 1960-ல் “தில் பீ தேரா ஹம் பீ தேரே” படத்தில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு 1961-ல் “பாய் ஃப்ரெண்ட்” படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

இவ்வாறாக, 1960 முதல் 1967 வரை பல காதல் கதைகள் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களில் தோற்றமளித்தார். அத்தகைய கலைஞரின் மறைவு தற்பொழுது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!