விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர், தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். இந்த இரண்டு கலைஞர்களும் நிகழ்ச்சியில் தங்களது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் தங்களது திறமைகளை படங்களிலும் நிரூபித்தனர். அவர்கள் பாடிய பாடல்கள் சமூக வலைத்தளங்களைக் கலக்கி, இணையத்தில் ஹிட்டாகி வருகின்றன.
செந்தில் கணேஷ், குறிப்பாக பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன மச்சான் சொல்லு புள்ள..” பாடலை பாடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, செந்தில் கணேஷ் ரசிகர்களிடையே அடையாளத்தை உருவாக்கியிருந்தார். மேலும் பல படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் பப்புவா நியூ கினியாவின் பிரதமர் மற்றும் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. எனினும் இந்த சந்திப்பு எதுக்காக நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!