சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அர்ச்சனா மற்றும் அருண். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் அருண். இவர்களுக்கு மேலும் பிரபலத்தை தேடி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வெற்றி பெற்றவர் தான் அர்ச்சனா. அதற்கு அடுத்த சீசனில் அருண் களமிறங்கினார்.. ஆனாலும் அவர் இறுதி வரை பயணிக்கவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அருண் இருக்கும்போதே இவர்களுடைய காதல் வெட்ட வெளிச்சமானது. அனைவருக்கும் தெரியும் படி தனது காதலை தெரிவித்தார் அருண். அதன் பின்பு இவர்கள் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடியாக வலம் வருகின்றார்கள்.

இந்த நிலையில், தனது 28 வது பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார் அர்ச்சனா. இதன்போது அவர்கள் ஜோடியாக சுற்றித்திரிந்த இடம், என்ஜாய் பண்ணிய விதம் ஆகியவற்றை வீடியோ ஒன்றின் மூலம் பதிவிட்டுள்ளார்.
தற்போது அர்ச்சனாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!