தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. இந்த படத்தை இயக்கவிருந்த சுந்தர்.சி, திட்டத்தில் இருந்து விலகியுள்ள தகவல் வெளிவந்தவுடன், படத்தை அடுத்து யார் இயக்கப்போகின்றனர் என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்களில் பல்வேறு பெயர்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலைப் பார்த்தால், தலைவர் 173 எப்படிப்பட்ட பிரமாண்டமான திட்டமாக இருக்கப் போகிறது என்பதை முன்னரே உணரலாம். ரஜினிகாந்தின் தொடர்ச்சியான வெற்றிப் படங்களான ஜெயிலர், கூலி போன்ற படங்களுக்குப் பிறகு, இந்த புதிய படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் இயக்குநர் மாற்றம், இந்த எதிர்பார்ப்புக்கு புதிய கோணத்தை வழங்கியுள்ளது.
சுந்தர்.சி ரஜினியுடன் பணியாற்றப்போவதாக வந்த செய்தி ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரின் கமர்ஷியல் மாஸ் ஸ்டைல், ரஜினியின் திரைப்பெயருக்கு ஏற்றதாக இருக்கும் எனத் தெரிந்ததால், கூட்டணி குறித்து நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டத்தில் இருந்து சுந்தர்.சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சுந்தர்.சி விலகியதைத் தொடர்ந்து, ரஜினியின் 173-வது படத்தை இயக்க நான்கு இயக்குநர்களின் பெயர்கள் சமீபமாக பேசப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலில், ராஜேஷ் எம். செல்வா, கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நான்கு இயக்குநர்களும் திரையுலகில் தங்கள் தனித்துவமான ஸ்டைலை கொண்டவர்கள். ஒவ்வொருவரின் ஸ்கிரிப்ட்களும் தயாரிப்பாளர் கமலும் ரஜினியும் ஒவ்வொன்றாக கேட்டு வருகிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி அதிக கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்யும் நிலையில், இந்த முறை ஸ்கிரிப்டுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!