தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கான முதல் மாநாடு 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழு நேரமாகவே அரசியலில் பயணிக்க உள்ளார் என்பதை தான் கட்சி தொடங்கிய முதல் நாளே அறிவித்திருந்தார். அவர் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகப் போகின்றார் என்ற அறிவிப்பு வெளியானதும் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவரோ அல்லது அவரது கட்சியினரோ மக்களை நேரடியாக சந்தித்து அவருடைய பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் அதற்கு முன்பு அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பல நலத்திட்ட உதவிகளை செய்தார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
அஜித்தும் விஜயும் நண்பர்களாக இருந்த போதும் அவர்களுக்கு இடையே மறைமுகமான போட்டிகள் விலகி வருவதாக பேசப்பட்டது. இருவரும் தங்களுடைய படங்களிலேயே மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடிப் பேசும் வசனங்களையும் பேசியுள்ளார்கள். பாடல்களிலும் அதேபோலத்தான் மோதல் போக்கு காணப்பட்டது. இது இவர்களுடைய ரசிகர்கள் இடையேயும் தொடர்ந்தது.
இந்த நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி விஜயின் கட்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது. அதில் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்ட நெரிசலில் யாரும்காலை மிதித்து விட்டால் நாம் இயல்பாக செய்வதை போல தொட்டு வணங்கும் போது கடவுள் என மட்டும் கூறாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வதை அங்குள்ள அஜித் ரசிகர்கள் பார்த்தால் அஜித்தே கடவுள் என சொல்லி விடுவார்கள் அதன் பின்பு என்ன நடக்கின்றதோ அது வரலாறாக மாறும் என வீடியோவில் ஒருவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சில அஜித் ரசிகர்கள் செய்தாலும் செய்வார்கள் என பேசி வருகின்றார்கள் தற்போது குறித்த வீடியோ வைரலாலி வருகிறது.
மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு... pic.twitter.com/hblGJsJGMV
Listen News!