• Nov 09 2024

இந்த வாழ்க்கை நல்ல ஜோராக செல்லும்.. 4வது திருமணம் செய்த பாலா நெகிழ்ச்சி பேட்டி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் சிறுத்தை சிவாவின் சகோதரர் தான் நடிகர் பாலா. இவர் மலையாள படங்களில் அனேகமாக நடித்துள்ள நிலையில், தமிழில் அன்பு, வீரம், மஞ்சள் வெயில், அண்ணாத்த உள்ளிட்ட ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருடைய முதலாவது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு இருந்தார். அதன் பின்பு ஜாமீனில் வந்த நடிகர் பாலா, தனது முன்னாள் மனைவி தனக்கு எதிராக சதி செய்வதாக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நடிகர் பாலா தற்போது தனது உறவினர் பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் இன்றைய தினம் கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் நடைபெற்று உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.


தனது திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலா கூறுகையில், எனது மனைவி கோகிலா எனது உறவுக்கார பெண் தான். என்னுடைய திருமணத்தில் எனது அம்மாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. 

இந்த திருமணம் என் மனைவி கோகிலாவின் கனவை நிறைவேற்றும் அவருக்கு மலையாளம் தெரியாது என்றாலும் ஒரு வருடமாக எனது உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு அவருடைய பங்கு மிகப் பெரிய அளவில் காணப்பட்டது. இதனால் இந்த திருமண வாழ்க்கை நன்றாக செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பாலா பேட்டி கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement