• Mar 17 2025

விஜயைப் போல உதயநிதி ஸ்டாலினும் நடிப்பதை விட வேண்டும்...!–பேரரசு அதிரடிக் கருத்து!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரபல இயக்குநரான பேரரசு சமீபத்தில் நேர்காணலில் ஒன்றில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்துக் கதைத்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நேர்காணலில் கலந்து கொண்ட பேரரசு, தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியலிலும், திரைப்படத்துறையிலும் நடக்கும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைப் பற்றிக் கதைத்துள்ளார். அந்த நேர்காணலின் போது, நடிகர் விஜய் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, "விஜய் மட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலினும் இனி திரைப்படங்களில் இருந்து விலகி அரசியலிலேயே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.


நடிகர் விஜயின் அரசியல் குறித்துப் பேசிய பேரரசு, "விஜய் தனது ரசிகர்கள் பலத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தது நல்ல முடிவு. அதேபோல், உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சராக இருக்கும் நிலையில், அவர் திரைத்துறையிலிருந்து முழுமையாக விலகி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவது தான் சரியான முடிவாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலுவான இடத்தைப் பிடித்திருப்பவர். எனினும் சமீபத்தில், அவர் தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதால், திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா?அல்லது அரசியலுக்காக முழுமையாக திரைத்துறையிலிருந்து விலகுவாரா? என்ற விவாதம் எழுந்துள்ளது.


பேரரசு கூறிய கருத்து, ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் "உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இருப்பதால், திரையுலகில் இருந்து விலகுவதே சரியான முடிவு" என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் "அவர் திரையுலகிலும் அரசியலிலும் சமநிலையில் இருந்து மக்களுக்கு நல்ல சேவை செய்யலாம்" என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement