• Mar 17 2025

லைகாவிற்கு வெற்றியைக் கொடுப்பாரா ஜேசன் சஞ்சய்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் லைகா நிறுவனம் கடந்த சில வருடங்களில் பல முக்கியமான படங்களை தயாரித்துள்ளது. அதில், பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தியன் 2, சந்திரமுகி 2, வேட்டையன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால், லைகா நிறுவனம் பெரிதும் நஷ்டமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகர் சுதீப் கிசானுடன் இணைந்து ஒரு புதிய படம் உருவாக்க உள்ளதாக தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் மூலம் லைகா நிறுவனம் மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லுமா? என்பது பற்றிய எதிர்பார்ப்பு தற்பொழுது உருவாகியுள்ளது.


லைகா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய பட்ஜெட்டில் பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவில் படங்கள் வசூலைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதிக பட்ஜெட்டில் தயாராகும் படங்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். ஆனால், உண்மையான வெற்றி மக்கள் அதனை ஏற்கும் போதுதான் கிடைக்கும். லைகா நிறுவனம் கடந்த கால தோல்விகளை மறக்கும் வகையில் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகும் படம் வெற்றியைக் கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement