• Mar 31 2025

கரீனா கபூர் வீட்டில் நடந்த விபரீதம்! தீவிர சிகிச்சைப் பிரிவில் சைஃப் அலிகான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் சைஃப் அலி கான் சமீபத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஆதிபுருஷ்  மற்றும் ஜீனியர் என்டிஆர் உடன் இணைந்து தேவரா படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

1993 ஆம் ஆண்டு வெளியான பரம்பரா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சைஃப் அலி கான். அதன் பின்பு அமிர்தா சிங் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அமிர்தா சிங்கை விவாகரத்து செய்து பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்தார்.

பிக்பாஸ் போட்ட பலே திட்டம்.. ஜாக்குலின் வெளியேறியது யாருடைய தூண்டுதலால்?

54 வயதாகும் சைஃப் அலி கான் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ராவில் கரீனா கபூருடன் வசித்து வருகின்றார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் திருட வந்தவர்களை தடுக்க முற்பட்டபோது அங்கு வந்த திருடர்கள் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். 


தற்போது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகிய பாலிவூட்  திரையுலகையே உலுக்கி உள்ளது. மேலும் கத்திக்குத்துக்கு உள்ளான சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சைஃப் அலி கான் வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட போதும் அவற்றையெல்லாம் தாண்டி திருடர்கள் வீட்டில் நுழைந்து கைவரிசை காட்டியதோடு திருடர்களை மடக்கிப் பிடிக்க முனைந்த சைஃப் அலி  கானை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement