• Jan 18 2025

அந்த ட்ரெஸ் பார்த்து விஜய் சேதுபதியே சிரிச்சாரு! இப்போ முத்துகுமரன் ரொம்ப மாறிட்டாரு!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருப்பவர் முத்துக்குமரன். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வரும் முத்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். மக்களின் சபோட்டும் அவருக்கே அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் போடும் ஆடைகள் குறித்து அவரின் ஆடை வடிவமைப்பாளர் சமீபத்திய பேட்டில் பேசியுள்ளார். 


பிக் பாஸ் தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டில் சிறப்பாக விளையாடும் முத்துக்குமரன் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்கிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் இவர் போடும் ஆடைகளை பார்த்து விஜய் சேதுபதி விமர்சனம் செய்வார். இது குறித்து முத்துவின் ஆடை வடிவமைப்பாளரிடம் கேட்ட போது அவர் இவ்வாறு சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். 


அவர் கூறுகையில் " பழைய முத்துகுமரனுக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ள முத்துவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் அதாவது கேரக்டரில் இல்லை ஆடைவடிவமைப்பில். முத்து நல்லா பேசுவாரு வெளிய எப்படி இருந்தாரோ அப்படி தான் உள்ளையும் இருக்குறாரு. அவரு பேசும் போது கவனிச்சா நிறைய நல்ல விஷயம் சொல்லுவாரு"  என்று முத்து பற்றி கூறினார். 


மேலும் " லாஸ்ட் வீக்ல மாலை மாதிரி டிரஸ் செஞ்சி பண்ணி அனுப்பி இருந்தேன். அதை பார்த்த விஜய் சேதுபதி நீங்களே உங்களுக்கு மாலை போட்டுக்கிறிங்களா? என்று கேட்டாரு. பிறகு இன்னொரு டிரஸ் அனுப்பி இருந்தேன் அதை சேதுபதி சார் பெஷன் காம்படிஷனுக்கு வந்த மாதிரி இருக்குனு சொன்னாரு. நான் முத்துக்காக பார்த்து பார்த்து வடிவமைப்பேன் அதை அனுப்புவமா வேணாமான்னு யோசிச்சிட்டு பிறகு அனுப்பி வைப்பேன். சார் என்ன சொன்னாலும் முத்து அதை கழட்டாம போட்டு இருப்பான். ஒரு நேரம் சொன்னான் "என் பிரட் ஒருத்தன் செஞ்சி அனுப்புறான் அவனை நம்பி கொடுத்தேன் இப்படி அனுப்பி செய்வான்னு தெரியாம போச்"சி என்று சொன்னான் அதை பார்த்து நானே சிரிச்சேன் என்று கூறினார்.

Advertisement

Advertisement