• Jan 18 2025

பிறந்தநாள் கொண்டாடும் விஜய் சேதுபதி..! வாழ்த்து கூறும் பிரபலங்கள்..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது அபாரமான நடிப்பினால் ரசிகர்கள் மனதை வென்றவர். ஹீரோ, வில்லன், குணச்சிரவேடம் என எந்த கதாபாத்திரத்தையும் இயல்பான நடிப்பால் அழகாக காட்டுபவர். இந்நிலையில் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


சினிமா திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என எல்லா மொழிகளிலும் ரசிகர்களை சம்பாத்தித்து வைத்துள்ளார். ஹீரோவாக கலக்கி வந்த இவர் மாஸ்டர், விக்ரம் வேதா, பேட்டை,ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அலறவிட்டிருப்பார். மேலும் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா, விடுதலை 2 என்பன மாபெரும் வெற்றியை தந்தது. 


பிரபல நடிகர்களுடன் நடித்து பெருமை சேர்த்ததுடன் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படுகிறார். விடுதலை 2 திரைப்படத்தினை தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார்.  சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரயில் திரைப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 47வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement