தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ரிலீஸ் ஆகும் படங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியன் 2, கோட், தங்கலான், கங்குவா ஆகிய படங்கள் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியானது. ஆனாலும் இந்த திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது. இதனால் கடும் ட்ரோலுக்கு உள்ளானது.
இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளிலேயே தமது மோசமான விமர்சனங்களின் மூலம் தவிடு பொடியாக பல விமர்சகர்கள் போட்டி போட்டு வருகின்றார்கள். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட யூட்யூபர்கள் இதனையே நோக்காக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது வெளியான விடாமுயற்சி படத்தையும் சுக்கு நூறாக உடைக்க ஒரு சில யூடியூபஸ்கள் திட்டமிட்டதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். அதிலும் வலைப்பேச்சு அந்தணனின் டீமில் உள்ள மூன்று பேரை சுட்டிக்காட்டி அவர் வழங்கிய பற்றி தற்போது வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், விடாமுயற்சி திரைப்படத்திற்கு முதல் நாளே நல்ல ஓப்பனிங் கிடைத்தது. வேலை நாட்கள் என்றும் பாராமல் அன்றைய நாளில் 93 சதவீதமானோர் திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று படத்தை பார்வையிட்டு இருந்தார்கள்.
ஆனால் இந்த படத்தை துவம்சம் பண்ணுவதற்காகவே போட்டி போட்டு பேசி வருகின்றார்கள். அதிலும் இனி வரும் விடுமுறை நாட்களுக்குள் அதன் வசூலை முறியடிக்க வேண்டும் என ஒரே நாளிலையே பல நெகட்டிவ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அஜித் இதில் நெகடீவாக நடித்துள்ளார். அது அஜித் ரசிகர்களை பாதிக்கும், அஜித் ரசிகர்களே அவருக்கு நெகடிவ் கமென்ஸ்ட் கொடுத்ததாக பேட்டி கொடுக்கிறார்கள்.
இதனை எல்லாம் பார்க்கும் போது தமிழ் சினிமாவை நினைத்து பயமாக உள்ளது என தனது பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
Listen News!