சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடந்து முடிந்து அதிகளவான மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியே பிக்பாஸ். அதில் பங்குபற்றிய ரவீந்தர் நேர்காணல் ஒன்றில் கலந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறியுள்ளார்.
அவர் அதில் கூறுகையில் , eviction இல்லை என்று திடீர் என decide பண்ணுறாங்க அதுக்கு அவர்கள் சொன்ன காரணம் தீபாவளி வாரம் என்றார்கள். அதற்கு ரவீந்தர் , தீபாவளி ஒன்றும் திடீர் என்று நியூட்டன் கண்டுபிடிக்கவில்லை என நக்கலாக பதிலளித்தார். அவங்களுக்கு தெளிவாக தெரியும் யாரு உள்ள இருக்க வேண்டும் யாரு வெளிய போக வேண்டும் என்று கூறினார். அத்துடன் எனக்கு முதல் நாளே முத்து சிறந்த போட்டியாளர் என்று தெரிந்து விட்டது என்றார்.
மேலும் அவர் தீபக்கை உடைக்கிறதுக்கு ஒரு காரணமும் கிடைக்கவில்லையா என்று முத்துவை கேட்ட போது இல்லை என்று கூறியதுடன் அதே போல் தீபக்கிடம் போய் உனக்கு முத்துவை திட்டுவதற்கு ஒரு காரணமும் இல்லையா என்று கேட்ட போது அவனும் இல்லை என்று சொன்னான். அப்பவே விலங்கிவிட்டது இரண்டு பேரும் நல்லா நடிக்கிறாங்கள் எனக் கூறியிருந்தார்.
அத்துடன் விஜய் சேதுபதி சார் ரானவுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் அந்தப் படத்தில் நடிக்கவே மாட்டன் எனக்கூறியது வருத்தமாக இருந்ததாக ரானவ் கூறியிருந்தான். அதற்கு நான், அவர் சும்மா ஜாலியாக கூறினார் நீ வருத்தப்படாத என்று கூறியதாக தெரிவித்தார்.
அத்துடன் நல்லா விளையாடாத யாரையும் நல்லா விளையாடல என்று யாருமே சொல்ல மாட்டார்கள் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அப்படி இல்லை விஜய் சேதுபதி பல தடவை விளையாடவில்லை எனக் கூறியுள்ளார் என்றார்.
Listen News!