இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக விடாமுயற்சி திரைப்படம் காணப்படுகிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அதில் அஜித் , ஆக்சன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் பிரபலம் ஆரவ் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியான முதல் நாளே 60 கோடிகளை கடந்துள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் வாங்கிய சம்பள விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றை விரிவாக பார்ப்போம்.
அதன்படி நடிகர் அஜித் இந்த படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில் அஜித் இந்த படத்திற்கு 100 கோடி ரூபாய் கம்மியாக சம்பளம் பெற்று உள்ளார்.
மேலும் திரிஷா 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜுன் 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளாராம். லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க மூன்று கோடி ரூபாய் வாங்கிய நிலையில், இந்த படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் அர்ஜுன்.
இவர்களை தொடர்ந்து ரெஜினா ஒரு கோடி ரூபாயும், ரம்யா சுப்ரமணியம் 40 லட்சமும் சம்பளமாக வாங்கியுள்ளார்கள். மேலும் நடிகர் யோகி பாபு மற்றும் ஆரவ் ஆகியோரும் 1 கோடி ரூபா சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த படத்திற்கு இசையமைத்த அனிருத் 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். தற்போது இந்த தகவல்கள் வைரலாகி உள்ளன.
Listen News!