• Jan 19 2025

விஜய்க்கு பின்னால் கூலிப்படை இருக்கு! பரபரப்பை கிளப்பும் பத்திரிக்கையாளர்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் என தளபதி 69 கூறப்படுகிறது. 


ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. தளபதி 69 படத்தை முடித்தபின், முழு நேரம் அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் கூறியுள்ளார். விஜய்யுடைய அரசியல் என்ட்ரிக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் கூடிக்கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் கூலிப்படை வைத்து நடத்தி வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய் போலவே சமூக வலைத்தளங்களில் கூலிப்படை வைத்துள்ளார் என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement