பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி தனது நண்பரிடம் பாக்கியாவை பற்றி பெருமையாக பேசுகின்றார். மேலும் தனக்காக ஹாஸ்பிடலில் பாக்கியா காத்திருந்ததாகவும் அவர் தன்னை கவனித்துக் கொள்வதாகவும் சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் ராதிகா எனது வாழ்க்கையில் கோபி வேண்டாம், எனக்கு எனது பிள்ளை மட்டும் போதும் என்று உடுப்புகளை எல்லாம் பேக் பண்ணி வைக்கின்றார். கமலா அவசரப்பட வேண்டாம் என்று சொல்லி கவலைப்படுகின்றார். ஆனாலும் ராதிகா தனது முடிவில் உறுதியாக இருக்கின்றார்.
இதை தொடர்ந்து இனியா டான்ஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வதற்காக சாமான்களை எல்லாம் எடுத்து வைத்து பேக் பண்ணுகிறார். இதன் போது பாக்கியா கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து இனியாவுக்கு திருநீறு வைத்து விடுகிறார்.
d_i_a
அதன்பின் இனியா எல்லாரும் ஒன்றாக கிளம்புவோம் என்று சொல்ல, நீங்க முன்னுக்கு போங்க எனக்கு சின்ன வேலை இருக்குது நான் முடித்துவிட்டு வருகிறேன் என்று பாக்கியா சொல்லுகிறார். அதற்கு கோபி நான் வருகிறேன் என்று தானே நீ வரவில்லை.. நான் நான் கேப்பில் புக் பண்ணி வாரேன்.. நீ இவர்களோடு செல் என்று சொல்லவும் பாக்கியா அவரது கதையை கணக்கெடுக்கவில்லை.
இதை தொடர்ந்து இனியா டான்ஸ் காம்பெடிஷனில் ரெடியாகி மேடையில் நிக்கும் போது பதற்றமாக காணப்படுகிறார். இதனால் கோபி ஓடி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை திடப்படுத்துகின்றார்.
இதை பார்த்து ஈஸ்வரி கண் கலங்குகின்றார். இனியாவுக்கு கோபி மீது பாசம்.. கோபிக்கும் இனியா மீது பாசம்.. இந்த ராதிகா கோபியின் வாழ்க்கையில் வந்திருக்கக் கூடாது என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!