விடுதலை பார்ட் 2 படத்தை பார்த்த இயக்குநர் சந்தான பாரதி "தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமே எடுக்க கூடாது" என்று விடுதலை 2 படத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். இந்த விடையம் தற்போது வைரலாகி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று ரிலீசான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை-2 திரைப்படத்தினை பார்த்த இயக்குநர் சந்தான பாரதி இது குறித்து கூறியிருப்பதாவது, "குணா படத்தின் பார்ட் 2 எடுத்து அதனுடைய மரியாதையை நான் கெடுக்க விரும்பவில்லை. ஒரு கிளாசிக் படத்தின் பார்ட் 2 படத்தை எப்போதும் எடுக்கவே கூடாது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும். பார்ட் 2 படம் எடுக்க விரும்பினால், அதற்கேற்ப கதை இருக்க வேண்டும், கதாபாத்திரங்களும் இருக்க வேண்டும். பார்ட் 2 படங்கள் எடுக்க கூடாது" என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய இவர் "தமிழ் சினிமாவில் மட்டும் தான் பார்ட் 2 படங்கள் பெரும்பாலும் கை கொடுக்கவில்லை. இந்தியன் 2, சிங்கம் 2, சாமி ஆகிய படங்களை சொல்லலாம். ஆனால் த்ரில்லர் பேய் படங்கள் நன்றாகவே தமிழ் சினிமாவில் கை கொடுக்கிறது. இதன் காரணமாகத்தான் அடுத்தடுத்து பாகங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
"மற்ற மொழிகளில் பார்ட் 2 படங்கள் கை கொடுக்கும் அளவிற்கு கூட தமிழ் சினிமாவில் பார்ட் 2 கை கொடுக்கவில்லை" என்று எண்ணும் போது சற்று வேதனை அளிக்கிறது" என்று விடுதலை 2 திரைப்படத்தினை குறித்து பேசாமல் மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளார்.
Listen News!