• Dec 21 2024

பொன்னாடை போத்துறீங்களே நியாயமா? அவர வீட்டுலையே சேர்க்க மாட்டேன்! தேவதர்ஷினி அதிரடி

Aathira / 10 hours ago

Advertisement

Listen News!

விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் முதலாவது நாளில் எட்டு கோடிகளை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில், விடுதலை 2 படத்தில் நடித்த சேத்தன் பற்றியும் அவருடைய கேரக்டர் பற்றியும் அவருடைய மனைவியான தேவதர்ஷினி வழங்கிய பேட்டி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன.  

விடுதலை 2 படத்தினை சேத்தனும் அவரது மனைவி தேவதர்ஷினி மற்றும் மகள் ஆகிய மூவரும் இணைந்து ரசிகர்களுடன் தியேட்டரில் சென்று பார்த்துள்ளார்கள். படம் முடிந்த பிறகு அதில் நடித்த சேத்தனுக்கு ரசிகர்கள் சால்வை அணிவித்து மரியாதையும் செலுத்தி உள்ளார்கள் .

d_i_a

இதன் போது தேவதர்ஷினி தனது கருத்தை கூறுகையில், விடுதலை 2 படம் நன்றாக உள்ளது. அவரை நிற்க வைத்து பொன்னாடை எல்லாம் போர்த்தி உள்ளீர்களே.. உங்களுக்கே நியாயமா.? நிறைய வில்லன் கேரக்டர்களை பார்த்து உள்ளேன். ஆனால் இதில் எனக்கே ஒத்துக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமானவராக சேத்தன் உள்ளார். ரொம்ப கொடூரமானவராக காணப்படுகின்றார்.


நானும் எனது மகளும் அவர் அருகில் கொஞ்சம் தள்ளித்தான் அமர்ந்தோம். சேத்தன் வீட்டுக்கு வந்தால் கதவையே திறக்க மாட்டேன். அவரை யாராவது கூட்டிச் செல்லுங்கள். ராஜா சார் தெய்வம்.. அவர் தொடர்பில் நான் என்ன சொல்வது என கலகலப்பாக பேசி உள்ளார் .

இதைத்தொடர்ந்து சேத்தன் கூறுகையில், எல்லா பெருமையும் வெற்றிமாறனுக்கு தான். அந்த கேரக்டரை எழுதியது தான் பாராட்டுகளை பெற காரணமாக அமைந்தது. விடுதலை முதலாவது பாகத்தை விட இது ஒரு படி மேல தான் காணப்படுகின்றது. ரொம்பவும் திருப்தியாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளா இந்த படத்தில் எல்லோரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். இது சிறந்த அனுபவத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement