• Jan 19 2025

விடாமுயற்சி ஸ்டண்டில் நொறுங்கிய கார் அஜித்தின் நிலை என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ரிஸ்க்கான ஸ்டண்டு காட்ச்சிகளை அவர்களே செய்யும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர் எனலாம். பைக் ரைட் , கார் ரேஸ்களில்  பெயர்போன அஜித் வலிமை திரைப்படத்தின் பொழுது விபத்துக்குள்ளாகியது தெரிந்த விடயமே. அவ்வாறே விடாமுயற்சி படப்பிடிப்பிலும்  விபத்துக்குள்ளாகினார்.


சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி ஆகும். குறித்த திரைப்படம் இடையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விடீயோக்கள் வெளியாகி உள்ளது. காரில் ஒருவரை ஏற்றிக்கொண்டு வேகமா அஜித் காரை ஒட்டிச் செல்லும் காட்ச்சியை படம்பிடிக்கும் போதே குறித்த சந்தர்ப்பத்தில் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.


அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளாகிய நிலையிலேயே அஜித்திற்கு பலத்த காயங்கள் ஏற்றப்பட்டுள்ளது. குறித்த காரும் சேதமடைந்து நொறுங்கியுள்ளது. குறித்த விடியோவை லைக்கா நிறுவனம் தனது X  தல பக்கத்தில் பதிவிட்டுள்ளது. குறித்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement