• Nov 24 2024

நினைக்காதது திடீரென நடந்தது! கோட் படப்பிடிப்பில் வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், பிரேம்ஜி அமரன், லைலா உள்ளிட்டோரை வைத்து வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் கோட் படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. என்ன வேலை இருந்தாலும் முதல் வேலையாக கோட் படத்தை பார்த்துவிடும் ஆசையில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 


கோட் படத்தில் விசில் போடு, சின்ன சின்ன கண்கள் என இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார் உங்கள் விஜய். மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை சின்ன சின்ன கண்கள் பாடலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த பாடலுக்கான டியூனை யுவன் சங்கர் ராஜா போட்ட நாளில் தான் பவதாரிணி மரணம் அடைந்தார். அந்த இழப்பால் அண்ணன் வெங்கட் பிரபுவும், தம்பி யுவன் சங்கர் ராஜாவும் நொறுங்கிப் போனார்கள்.


இருந்தாலும் தன்னை நம்பி பணம் போட்டிருக்கும் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்காக மனதை தேற்றிக் கொண்டு பட வேலையை தொடர்ந்தார் வெங்கட் பிரபு. முன்னதாக சிம்புவை வைத்து மாநாடு படத்தை எடுத்தபோது வெங்கட் பிரபுவின் தாய் காலமானார். தற்போது தங்கை பவதாரிணி இறந்துவிட்டார்.


தங்கை இறந்தது பெரிய இழப்பு. முன்னதாக மாநாடு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். அப்பொழுது நான் என்ன நிலைமையில் இருந்தேன் என்று கூட எனக்கு தெரியாது. ஒரு படத்தில் பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சோகத்தால் அப்படியே இருந்துவிட முடியாது. உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு வேலை செய்ய வேண்டியது தான் என்றார்.


கோட் படத்தில் பவதாரிணியை பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது அவர் உயிருடன் இருந்தார். ஆனால் அவரை பாட வைப்பதற்குள் இறந்துவிட்டார். அதே போன்று கேப்டன் விஜயகாந்தை கோட் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்து இறந்துவிட்டார். இதையடுத்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கோட் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். நாளை தியேட்டர்களில் விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திரைப்படம் எடுக்க நிறைய தடங்கல்கள் வந்தாலும் அதனை தகர்த்து செய்து முடித்துள்ளேன். எல்லாரும் தியேட்டரில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement