• Oct 08 2024

இளைஞர்களை துள்ளல் ஆட்டம் போடவைத்த கோட் படத்தின் ‘ஸ்பார்க்’ பாடல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காணப்படுகின்றது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றன.

இந்த நிலையில், கோட் படத்தின் மூன்றாவது சிங்களான ஸ்பார்க்  பாடல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் அப்பா விஜய்க்காக உருவாக்கப்பட்ட பாடல்கள் என்ற நிலையில் தற்போது வெளியான பாடல் மகன் விஜய்க்காக வெளியாகி உள்ளது.

கோட் படத்தில் நடிகர் விஜய் இளமையாகவும் வயதான தோற்றத்திலும் சிறப்பித்துக் காட்டி உள்ளார் வெங்கட் பிரபு. இளம் வயது விஜய்க்காக டீ ஏஜிங் செய்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் நடனமாடியுள்ள பாடல் எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்ற அச்சம் காணப்பட்டது. ஆனால் தற்போது சூப்பராகவே அந்த காட்சிகளை படமாக்கியுள்ளார் வெங்கட் பிரபு.


யுவன் சங்கர் ராஜா இசையில் முதலாவதாக வெளியான விசில் போடு பாடல் மற்றும் இரண்டாவதாக வெளியான சின்ன சின்ன கண்கள் பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. அதில் சமீபத்தில் உயிரிழந்த பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது  விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடனமாடும் ஸ்பார்க் பாடலையும் யுவன் தனது மேஜிக் இசையில் இளைஞர்களை  ஆட்டம் போட வைக்கும் வகையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement