• Jan 18 2025

செய்வினை முட்டை வைத்தது யாரு! முத்து காட்டிய வீடியோவால் அதிர்ச்சி! டுவிஸ் கொடுத்த நபர்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில்  விஜயாவும், மனோஜும் ஜோசியர் சொன்னதுபடி, கோவிலில் தீச்சட்டி ஏந்தி பிரகாரத்தை சுற்றி வருகின்றனர். மனோஜ் இருக்கும் கோலத்தை பார்த்து கோவிலுக்கு வருபவர்கள் சிரிக்கிறார்கள்.  அந்தசமயத்தில் கோவிலுக்கு வரும் முத்துவும், மீனாவும் இருவரையும் பார்த்து ஷாக் ஆகி வீடியோ எடுத்து வைத்துக்கொள்கிறார்.


வீட்டிற்கு வரும் முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் அந்த வீடியோவை போட்டு காட்டுகின்றனர். பின் டிவியில் போட ரவியும் ஸ்ருதியும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இதை பார்த்து ரோகிணி, மனோஜ் , விஜயா கடுப்பாகின்றனர்.


பின் அண்ணாமலை இதெல்லாம் எதுக்கு பண்ணீங்க என கேட்கிறார்.மனோஜ், ”எனக்கு யாரோ செய்வினை வெச்சிருக்காங்க. அதுக்கு பரிகாரமாதான் இப்படி செஞ்சோம்” என கூறுகிறார். பின் அண்ணாமலை ஒருவரை அழிக்க 3 முட்டை போதும்னா அப்போ உலகுத்துல யாரும் நல்லாவே வாழ முடியாது என்கிறார்.


இதை கேட்டு மீனாவும் கரெக்ட் மாமா என்று சொல்கிறார். உடனே விஜயா கோபப்பட்டு மீனாவை திட்டுகிறார்.உடனே மனோஜ் விடுங்கமா சிரிக்கிறவங்க சிரிக்கட்டும். இனி நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறார். அந்தசமயத்தில் கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் கடை சாவியை வாங்க வருகிறார்.


கடை வாசலில் இருந்த முட்டை ஏடிஎமில் வேலை பார்க்கும் தாத்தாவோடது அவரு பேரனோட வீட்டுக்கு போகும் போது மழை வந்திருக்கு. அப்போ வீட்டுக்கு வாங்கி வெச்சிருந்த முட்டைல அவரோட பேரன் போர் அடிக்குதுனு கண்ணு மூக்குலா வரஞ்சிருக்கான் சார் என்று சொல்கிறார். இதை கேட்கும் குடும்பத்தினர் குபீரென விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.


Advertisement

Advertisement