• Jan 19 2025

இன்று வெளியாகிறது "ஜமா" படத்தின் அடுத்த வீடியோ பாடல் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

பாரி இளவழகனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியிருக்கும் "ஜமா" திரைப்படமானது நேர்மறையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் மற்றும் பலர் நடித்துள்ள இப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உடைந்ததாய் இல்லை.

ஜமா விமர்சனம்: `வந்தனம் வந்தனம் கல்யாணம்!' சிலிர்க்க வைக்கும் நடிப்பில்  கூத்துக் கலைஞனின் வாழ்க்கை! | Jama Review: A wonderful performance but the  inconsistency in ...

எமது சமூகத்தில் குறைவாக மதிக்கப்படும் தெருக்கூத்து கலைஞர்களின் ஆசையும் கனவும் அதையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நடிகர்களின் உணர்வுகளை திரையில் கொண்டு வந்திருக்கும் "ஜமா" திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடமிருந்து பாராட்டை பெற்று வருகிறது.

Image

இந்நிலையயில் "ஜமா" படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது."ஜமா" படத்தின் முக்கிய பாடலான 'போடா போ' பாடலின் வீடியோ பாடல் இன்று மாலை 6 மணியளவில்  வெளியாகவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement