தென்னிந்திய சினிமாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவந்த நடிகை ஸ்ரீலீலா, தற்போது பாலிவுட்டிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளார். தனது நடிப்புத் திறன் மற்றும் அவரது சிறப்பான நடனத் திறனால் பல ரசிகர்களை கவர்ந்துள்ள இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்ரீலீலா, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழ் ரசிகர்களிடையே இவர் சிறப்பான வரவேற்பைப் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யன் நடிக்கும் ஒரு பெரிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனால், தற்போது ஹிந்தி திரையுலகிலும் இவருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாலிவுட்டில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலீலா, அங்குள்ள பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கார்த்திக் ஆர்யன், பாலிவுட் திரையுலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவரைச் சுற்றி எப்போதும் காதல் வதந்திகள் உலாவிக் கொண்டே இருக்கும். சமீபத்தில் ஸ்ரீலீலாவுடன் நெருக்கம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் கார்த்திக் ஆர்யனின் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், ரசிகர்கள் இவர்களின் உறவைப்பற்றி பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
Listen News!