• Oct 01 2026

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வெளியாகியுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மீண்டும் நடிப்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

1960-களின் பின்னணியில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இந்தப் பாடலை சாய் அபயங்கர் மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடலின் இசை, காட்சியமைப்பு மற்றும் விஜய் சேதுபதியின் தோற்றம் குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அவர், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ‘பத்தா’ படத்தில் தோன்றவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

‘பத்தா’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement