பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி கோபியை இன்னும் காணேல என்று தேடிக்கொண்டிருக்கார். அந்த நேரத்தில ஈஸ்வரியைத் தேடி செழியன் அங்க வந்து நிக்கிறார். அதுக்கு ஈஸ்வரி இப்பதானே இங்க இருந்து போனி அதுக்குள்ள ஏன் வந்து நிக்கிற என்று கேக்கிறார். அதைக் கேட்ட செழியன் அப்பா தான் உடனே வரச்சொன்னார் என்று சொல்லுறார். அதனை அடுத்து கோபி வந்து நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட செழியன் ஏன் அப்பா என்னாச்சு என்று கேக்கிறார். அதனைத் தொடர்ந்து கோபி சுதாகர் இனியான்ர கலியாணம் பற்றிக் கதைச்சத எல்லாருகிட்டையும் சொல்லுறார். அதைக் கேட்டவுடனே செழியன் சந்தோசப்படுறார். இதைத் தொடர்ந்து ஈஸ்வரி நாளைக்கு காலையில் பாக்கியாகிட்ட போய் இதைப் பற்றிப் பேசலாம் என்று சொல்லுறார்.
மறுநாள் காலையில பாக்கியா செழியனைப் பாத்து ஏன் இண்டைக்கு வேலை இல்லையோ என்று கேக்கிறார். அதுக்கு செழியன் இண்டைக்கு வீட்ட இருந்து தான் வேலை என்று சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி பாக்கியா வீட்ட வந்து உள்ள வரலாமா என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா உடனே, உள்ள வாங்க என்று சொல்லுறார்.இதைத் தொடர்ந்து கோபி ஏழிலைப் பாத்து ஏன் எங்கள எல்லாம் பாக்க வாறது இல்ல என்று கேக்கிறார்.
பின் ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து பொம்பிளப் பிள்ளைக்கு உடனே கலியாணம் செய்து வைக்கணும் அவள் படிச்சது எல்லாம் போதும் என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா இனியாவுக்கு கலியாணத்தில விருப்பம் இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து இனியாவுக்கு மாப்பிள பாத்திட்டோம் என்று ஈஸ்வரி சொல்லுறார். அதைக் கேட்டு பாக்கியா கோபம் கொள்ளுகின்றார். பின் கோபி இனியாவ தனியாக் கூப்பிட்டு கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து கோபிக்கு உடம்பு சரியில்ல என்று செழியன் வந்து சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!