• Apr 02 2025

'சுபம்' டீசருக்குக் கிடைத்த அமோக வரவேற்பு..! உருக்கமான பதிவினை வெளியிட்ட சமந்தா!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சமந்தா ரூத்பிரபு தயாரித்திருக்கும் ‘சுபம்’ திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு நன்றி என சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'சுபம்’ டீசர் வெளியானதிலிருந்து, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சமந்தா மாறுபட்ட தோற்றம், செம்மையான நடிப்பு என்பவற்றின் மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். அந்தவகையில் சமந்தாவின் புதிய முயற்சி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.


இந்த வரவேற்பைப் பார்த்த நடிகை சமந்தா, "சுபம் டீசருக்கு கிடைத்த அற்புதமான ஆதரவுக்காக உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. இந்தப் பயணம் எனக்கு மிகவும் சிறப்பானதாக காணப்படுகின்றது. படம் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது என்றதுடன் உங்கள் எல்லாரையும் திரையரங்கில் சந்திப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கின்றேன்!" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் சிறப்பாக்கும் தகவல் என்னவென்றால், ‘சுபம்’ படம் சமந்தா தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படமாகும். இதுபோன்ற ஒரு புதிய முயற்சியில், அவர் எடுத்திருந்த திட்டம் வெற்றிகரமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் "இது எனது தயாரிப்பில் உருவாகும் முதல் படம் என்பதால், இதன் மீது என்னுடைய ஆசையும், அக்கறையும் அதிகம். கண்டிப்பாக படத்தைப் பார்த்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ‘சுபம்’ படம் சமந்தா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நல்ல கதைகள் விரும்பும் அனைத்து ரசிகர்களுக்குமான திரைப்படமாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement