• Jan 19 2025

கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்த கிழக்கு வாசல் சீரியல் குழுவினர்- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி,வெற்றிகரமாக 100 அத்தியாயங்களை கடந்துள்ள  சீரியல் தான் கிழக்கு வாசல் சீரியல் . முதலில் இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் நடிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டு வெங்கட் நாயகனாக கமிட்டானார்.

MN மனோஜ் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த கிழக்கு வாசல் தொடரின் நாயகியாக ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகின்றார் . நடிகர் விஜய்யின் அப்பா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


வளர்ப்பு மகள் தன்னுடைய குடும்பத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.100 அத்தியாயங்களை கடந்த மகிழ்ச்சியை  முன்னிட்டு கிழக்கு வாசல் சீரியல் குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement