• Aug 21 2025

கொடி ஏற்றிய கையோடு பிரேமலதாவை கோட் டீம்முடன் சந்தித்த தளபதி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் பணிகள் கூடிய விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்றைய தினம் பௌர்ணமி என்பதால் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து உள்ளார். அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அத்துடன் தனது கட்சி பாடல் ஒன்றையும் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில், இன்றைய தினம் கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருடன் விஜயும் இணைந்து அண்மையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும் தற்போதைய தலைவருமான பிரேமலதாவை நேரில் சந்தித்து தனது கோட் படத்திற்காகவும் அரசியல் பயணத்திற்காகவும் வாழ்த்துக்களை பெற்று திரும்பியுள்ளார் தளபதி விஜய்.

ஒரு சில தினங்களுக்கு முன்புதான் கோட் படத்தின் ட்டெய்லர்  வெளியாகி சாதனையை படைத்தது. தற்போது கோட் படத்தில் ஊடாக மறைந்த விஜயகாந்தை நடிக்க வைக்க அனுமதி அளித்ததற்கு நன்றியும் தெரிவித்து உள்ளாராம்.

Advertisement

Advertisement