• Oct 08 2024

சிகிச்சையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய பி.சுசீலா..!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல பாடகியான பி.சுசீலா பாடிய பாடல்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளன. ரசிகர்களைக் கவரும் அவரது மெல்லிய குரலிசையில் ஏராளமான பாடல்களை பாடி இருந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என கிட்டத்தட்ட ஒன்பது மொழிகளிலும் இவரது புகழ் பரவி காணப்பட்டது. அதிலும் இதுவரையில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளாராம்.

ஆரம்ப காலங்களில் பி. சுசீலாவின் குரலில் வெளியாகும் பாடல்கள் தான் தமது படத்தில் இருக்க வேண்டும் என பல நடிகைகள் விடாபிடியாக இருந்துள்ளார்கள். அந்த அளவுக்கு இவரது குரல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பி .சுசீலாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், தற்போது பி.சுசிலா சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து பூரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்

Advertisement