• Oct 30 2024

துருவ நட்சத்திரம் பட வழக்கில் வைக்கப்பட்ட செக்! இறுதியில் கவுதம் மேனன் அளித்த உறுதி! வெளிவந்த புதிய தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன் ,விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் துருவ நட்சத்திரம். 

2016 ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த படம் 2018ல் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது இருந்து பல வருடங்களாக கிடப்பில் இருந்த அந்த படத்தை தற்போது திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. 

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இம்மாதம் 24ஆம் திகதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் நிறைவு அடையாததால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.


எனினும், 'துருவ நட்சத்திரம்' இன்று ரிலீஸாகாது என்று இயக்குநர் கௌதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

இந்த நிலையில், சிம்பு நடிப்பில் 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்க ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.2.40 கோடி, வரும் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் தரப்படும் எனவும் பணம் செலுத்திய பின்னரே 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியிடப்படும் எனவும் சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், இன்று பணத்தை தர முடியவில்லை, அதனால் படத்தையும் வெளியிடவில்லை. அடுத்த திங்கள், அல்லது புதன் பணத்தை செலுத்திவிட்டு படத்தை வெளியிடுவதாக உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் கவுதம் மேனன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement