• Jan 19 2025

பைத்தியக்காரனுக...ஒழுங்கா ஆடிஷன் வச்சித்தான் எடுத்தாங்களா? மூவருக்கு மட்டும் தலைகீழான பிக் பாஸ் இல்லம்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். 

தற்போது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால் உள்ளே உள்ள 14 பேரும் போட்டியை தொடரலாம் இல்லை என்றால் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மூவருக்கு இடம் விட்டு விலக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை விடாமுயற்சியுடன் விளையாடி வருகின்றனர்.


இதன் இடையே, மோதல், காதல், போட்டி, பொறாமை, என பல திருப்பங்களும், அடுத்தவரை கவிழ்க்க போடப்படும் திட்டங்களும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் அர்ச்சனா, மணி, ரவீனா ஆகிய மூவரும் செம்ம ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.


அதன்படி அதில் குறித்த மூவரும் சோபாவில் தலை கீழாக படுத்துக் கொண்டு ஏனைய போட்டியாளர்களை கலாய்த்துக் கொண்டு உள்ளனர். இதனை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement