• Jan 19 2025

டேஞ்சர் சோனில் சிக்கியுள்ள அதிக பெண் போட்டியாளர்கள்! இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா வெளியேறினார். அனன்யா வெளியேறிய மறுநாளே எழுத்தாளர் பவா செல்லத்துரை தானாக விரும்பி வெளியேறினார்.இதைத் தொடர்ந்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து,  பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு மூலம் மேலும் 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர். எனினும் அவர்களில் இருவர் கடந்த வாரங்களில் வெளியேறி இருந்தனர்.


அதேவேளை, தற்போதுள்ள பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கன்டென்ட் தராமல் விளையாடுவதால் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளர்களை இறக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் 3 வைல்டு கார்டு  வரவுள்ளதாக சொல்லப்பட்டது. இதற்காக மூவர் வெளியேற வேண்டும் எனவும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக இருவர் வெளியேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

அந்த வகையில், தற்போது டேஞ்சர் சோனில் சுமார் 5 போட்டியாளர்கள் குறைவான ஓட்டுக்களுடன் உள்ளனர். அதிலும், மாயா பூர்ணிமா, அக்‌ஷயா, ரவீனா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். அத்துடன்,விஜே பிராவோவும் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று டேஞ்சர் சோனில் உள்ளார்.

அதன்படி, இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் ஆர்ஜே பிராவோ எவிக்ட் ஆக நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும், பூர்ணிமா அல்லது மாயா இருவரில் ஒருவர் எவிக்ட் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக  கணிப்பிடப்பட்டுள்ளது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். யார் வெளியே போக போவது என்பதை.

Advertisement

Advertisement