• Sep 14 2024

விஜய் டிவி மேடையில் இந்திரஜிதாவுக்கு நடந்த சடங்கு.. தாத்தாவான ரோபோ சங்கர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் திகழ்பவர் தான் ரோபோ சங்கர். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் மூலம் தனது பயணத்தை தொடங்கி பல கஷ்டங்களை அனுபவித்து உயர்ந்த நிலையை அடைந்தார்.

2019 ஆம் ஆண்டு வெளியான விஜயின் பிகில் திரைப்படத்தின் மூலம் இவருடைய மகளான இந்திரஜிதா சங்கர் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். அதில் பாண்டியம்மா என்ற இவரது கேரக்டர் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து படங்களில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய  தாய் மாமனான கார்த்திக் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண படு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதன்போது உலகநாயகன் கமலஹாசன் மட்டுமின்றி நயன்தாரா, சூர்யா, ஜோதிகா மற்றும் ஏராளமான பிரபலங்களும் அரசியல்வாதிகளும் இவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கிப்டாக கொடுத்து வாழ்த்தி இருந்தார்கள்.


தற்போது கார்த்திக் இந்திரஜிதா ஜோடி இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகின்றார்கள்.

இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சியில் வைத்து நல்ல விஷயம் ஒன்றை இந்திரஜிதா வெளியிட்டுள்ளார். அதாவது  இந்திரஜிதா கர்ப்பமாக உள்ள நிலையில் தான் தாத்தா ஆகிவிட்டதாக ரோபோ சங்கர் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் விஜய் டிவி மேடையில்  இந்திரஜிதாவுக்கு சடங்குகள் நடத்தி அழகும் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Advertisement

Advertisement