• Jan 19 2025

நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது! எதற்காக போடப்பட்ட வழக்கு ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் பல பிரபலங்கள் , அரசியல் வாதிகள் , நடிகர்கள் மீதான வழக்குகள்  அதிகரித்து  வருகின்றன. அவ்வாறே உலக அளவில் பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கு பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


தனுஷ் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் வெற்றிமாறனுடன் இணைந்து நடித்த படங்கள்  வெற்றி படங்களாகும்.


இந்த நிலையிலேயே நடிகர் தனுஷ்க்கு எதிரான வழக்கு சென்னை போயஸ் கார்டனில் தான் வசித்து வந்த வாடகை வீட்டை தனுஷ் வாங்கி விட்டதால் காலி செய்யுமாறு வற்புறுத்தியதாக அஜய் குமார் லுனாவத் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் இரு தரப்பிற்கிடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement