• Jun 23 2024

அடுத்த பொங்கலுக்கு தரமான ஜல்லிக்கட்டு பார்க்கலாம் போல..! அதகள அப்டேட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க  கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வேகமாக பரவி வருகின்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கத் திட்டமிட்ட படம் தான் வாடிவாசல். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு மற்றும் அதை ஒட்டிய வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதில் மாடுபிடி வீரராக சூர்யா நடித்துள்ளார். இதற்காக சிறந்த வீரர்களிடம் பயிற்சியும் பெற்றார்.

வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா மாடுபிடிக்கும் வீடியோக்களை படக் குழு வெளியிட, அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . அதற்கு ஜல்லிக்கட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்து இருந்தார்கள்.


எனினும், சில சர்ச்சைகளினால் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படுமோ என்ற அச்சம் சூர்யா ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் அமீர் நடிப்பது தான். இதனால் இந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறுவதாக பல தகவல்கள் கசிந்தது. இறுதியில் படத்திலிருந்து அமீரும் வெளியேறவில்லை. சூர்யாவும் வெளியேறவில்லை.

இந்த நிலையில், விடுதலைப் படத்தில் இரண்டாம் பாகம் முழுமையாக முடித்துவிட்டு அதற்குப் பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக வெற்றி மாறனின் படக் குழு  திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இருந்து வாடிவாசலுக்கான படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டுக்கான பொங்கல் ரிலீஸ் ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement