• Dec 21 2024

தனது குழந்தையை காரில் மறைத்து சென்ற உலக அழகி.. திடீரென வெளியான வீடியோ

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை ஆக திகழ்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகிப் பட்டதையும் வென்றிருந்தார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம்,கன்னடம் என பலமொழிகளிலும் நடித்து புகழின் உச்சத்தில் காணப்படுகின்றார்.

தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். அதில் அவரது அழகும் அவர் அணிந்த ஆடை அணிகலன்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

d_i_a

இந்த படத்தில் அவர் பதுமையான பெண்ணாக தோற்றம் அளித்தாலும் அவர் எதிர் நோக்கிய சவால்கள், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகள், சதித்திட்டங்கள், காதல், வலி என அனைத்தையும் மிகவும் எமோஷனலாக ரசிகர்களுக்கு வெளிக்காட்டி இருந்தார்.


இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற உள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். ஆனால் இதை மறுக்கும் வகையில் இருவரும் சமீபத்திய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து இருந்தார்கள். 


மேலும் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் தனது குழந்தையை பார்த்துக் கொள்வதால் தான் தன்னால் சுதந்திரமாக வேலை பார்க்க முடிகின்றது என தனது மனைவிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் காரில் செல்லும் போது தனது குழந்தையை மீடியாக்கள் போட்டோ எடுப்பதை கையால் மறைத்துக் கொள்கின்றார். அந்த காரில் அபிஷேக் பச்சனும் காணப்படுகின்றார். தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement