ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றது. இதில் திறமையான பல குழந்தைகள் தங்களுடைய டெலண்டை வெளியுலகிற்கு காட்டி வருகிறார்கள்.
ஜீ தமிழில் அனைவரின் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியான சரிகமப லிட்டில் சாம்ஸ்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இன்றைய தினம் கிராமத்து மண்வாசனை சுற்று இடம்பெற உள்ளது.
d_i_a
இந்த சுற்றில் பங்கெடுத்த போட்டியாளர் திவினேஷ் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பாடலைப் பாடி சரிகமப மேடையை கலங்க வைத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த பாடலை திவினேஷ் பாடும் போது அவருடைய ரசனை நடுவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற காளி வெங்கட்டும் திவினேஷை ஓடிச் சென்று கட்டித் தழுவி இருந்தார்.
எனவே இந்த வாரம் சரிகமபவில் கிராமத்து மண் வீசும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதில் ஏனைய குழந்தைகளின் திறமையையும் இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!