• Dec 21 2024

த்ரிஷாவுடன் சென்ற அதே Shoe_ஆஆ...? டாப் நடிகையுடன் நள்ளிரவில் விஜய்..?

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த முதலாவது படமே பிளாப் ஆனது. இதனால் தமிழ் சினிமாவே வேண்டாமென டோலிவுட் பக்கம் திரும்பினார்.

டோலிவுட்டில் ராசியான ஹீரோயினாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே. அதன் பின்பு சுமார் 10 ஆண்டுகள் கழித்து பூஜாவை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்தார் நெல்சன். அதுவும் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்தப் படமும் படு தோல்வியை சந்தித்தது.

இந்தப் படத்தின் தோல்விக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் தலை காட்டாமல் இருந்த பூஜா, மீண்டும் விஜயுடன் தளபதி 69 ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். அதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா  பக்கத்தின் ஸ்டோரில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் 2024 ஆம் ஆண்டிற்கான கடைசி புகைப்படம் என தளபதி விஜயுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அதில் இருவரின் கால்கள் மட்டுமே தெரியுமாறு போட்டோவை எடுத்துள்ளார். சுமார் நள்ளிரவு 12. 20 மணிக்கு அவர்கள் எடுத்த கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

இதேவேளை குறித்த புகைப்படத்தில் உள்ள ஷுவை பார்த்த ரசிகர்கள் இது தளபதி விஜயின் ஷூ தானே.. ஏற்கனவே அவர் த்ரிஷாவுடன் சென்ற புகைப்படம் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement