• Feb 16 2025

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி.. சுந்தர்.சி போட்ட பக்கா ஸ்கெட்ச்

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குநராக சுந்தர் சி காணப்படுகின்றார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா ஆகிய  படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனால் செம சந்தோஷத்தில் இருக்கும் சுந்தர் சி, அடுத்தடுத்து பல படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி கலகலப்பு 3, நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2, விஷாலை வைத்து இன்னும் ஒரு படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் கடந்த வருடமே வைகைப்புயல் வடிவேலை வைத்து கேங்கர்ஸ் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். சுந்தர் சி - வடிவேலுவின் கூட்டணி 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மேலும் சுந்தர். சியின் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் அவருடைய படத்தில் வடிவேலு இணைவதால் இது பக்கா என்டர்டைன்மெண்ட்  படமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. 

இந்த நிலையில், சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள கேங்கர்ஸ் படம் பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஐந்து கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸ் காட்சிகளில் வடிவேலு பெண் வேடத்தில் காமெடியில் கலக்க உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement