திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவரே நடிகர் அஜித் குமார். இவர் வலிமை , துணிவு மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்து கொண்டார். சமீபத்தில் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற படம் வெளியாகி கொஞ்ச நாட்களிலேயே அதிகளவான வசூலைப் பெற்றுக் கொண்டது.
மேலும் அஜித் , படங்களில் நடிப்பதிலும் விட கார் ரேஸில் கலந்து கொள்வதில் அதிகளவு ஆர்வம் கொண்டவர். இதனால் சமீபகாலமாக கார் ரேஸிங்கில் பங்குபற்றியும் வருகின்றார். அத்துடன் அஜித் கடந்த மாதம் துபாய் கார் ரேஸில் பங்குபற்றி வெற்றியடைந்து கொண்டு பத்மபூஷன் விருதையும் வாங்கி இருந்தார்.
இதனால் தமிழக கவர்னர் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாராட்டு விழாவினை இன்று நடாத்தவுள்ளதாக தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது . இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பாக உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க இருந்துள்ளனர்.
மேலும் பிரபல நடிகர் அஜித் , அந்த நிகழ்வில் பங்கேற்க மறுத்ததாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த பலரும் கலந்து கொள்ளுவார்கள் இதனாலேயே அஜித் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் எனக் கூறியதாக அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் மேலும் விவாதத்திற்கு இடமளிக்கக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் இது தொடர்பாக எதிர்கட்சிகள் பலரும் எதிர்மாறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!