பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தான் தனுஷ். இவர் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு பலர் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாலும், ஒரு சிலர் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்கள், தனுஷால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது, நெப்போலியனுக்கு இதையெல்லாம் யோசிக்கும் பக்குவம் இல்லையா என்று பல விமர்சனங்களை முன் வைத்தனர்.
ஆனாலும் தன்னை விமர்சித்தவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், நீங்க நெகட்டிவா பேசுறதும் எனக்கு மோட்டிவேஷன் தான் இருக்குது.. இது எல்லாம் என்னை பெரிதாக பாதிக்கவில்லை.. நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று வெறியில் இருக்கின்றேன்.. ஆகவே நான் சாதித்து விட்டு உங்களிடம் பேசுகின்றேன் என்று பதிலடி கொடுத்திருந்தார் தனுஷ்.
அதேபோல அக்ஷயாவும் அவருடைய பெற்றோரும் இந்த திருமணம் எங்களுடைய மனப்பூர்வமான சம்மதத்துடன் தான் நடைபெற்றது, பணத்துக்காக திருமணத்தை செய்து வைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், நேற்றைய தினம் காதலர் தினத்தை கொண்டாடும் முகமாக தனுஷுக்கு அக்ஷயா கேக் வெட்டி தனது அன்பை பரிமாறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!