சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியது. இதில் நாம்தமிழர் கட்சி 8.2 % வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் நாம்தமிழர் கட்சியின் தலைவர் அனைவர்க்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் " வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கும்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இரத்தம் தி.வேல்முருகன் அவர்களுக்கும்,
மதிமுக தலைமைக் கழகச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பி துரை வைகோ அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ - தமிழ்நாடு மாநிலத் தலைவர் தம்பி நெல்லை முகமது முபாரக் அவர்களுக்கும்,
அன்புத் தம்பிகள் இயக்குநர்கள் சேரன். அமீர். சுரேஷ் காமாட்சி. ஆதம் பாவா ஆகியோருக்கும், ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், நடிகை கஸ்தூரி அவர்களுக்கும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களுக்கும், அரசியல் திறனாய்வாளர் அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்.
பத்திரிகையாளர்கள் ஐயா அய்யநாதன், ஐயா பா.ஏகலைவன், சகோதரர் எஸ்.பி.லட்சுமணன், தம்பி ரங்கராஜ் பாண்டே, சகோதரர் சிவப்ரியன் ஆகியோருக்கும், ஊடகவியலாளர்கள் சகோதரர்கள் வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன், தம்பி கார்டூனிஸ்ட் பாலா, தம்பி பிரசாந்த் ரங்கசாமி, தம்பி அருள்மொழிவர்மன். தம்பி கேப்ரியல் தேவதாஸ் ஆகியோருக்கும், அம்மையார் ஜெயலலிதா அவர்களின் முன்னாள் உதவியாளர் சகோதரர் பூங்குன்றன் அவர்களுக்கும் மற்றும் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும்
பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், அரசியல் ஆளுமைகளுக்கும், திரைத்துறை உறவுகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அச்சு, காட்சி மற்றும் வலையொளி"
என குறிபிட்டுள்ளார். தளபதி விஜய் குறித்த வெற்றிக்காக தனது X தள பக்கத்தில் வாழ்த்து கூறியிருந்த நிலையில் அவரது பெயரை தனியாக குறிப்பிடாமல் இணையத்தின் மூலம் பாராட்டியவர்களுக்கு நன்றி என பொதுவாக குறிப்பிட்டிருப்பது வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
Listen News!