• Jul 19 2024

அஞ்சாமை திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் ! புதிதாக கிளம்பிய சிக்கல்!

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களுடன் வரும் திரைப்படங்களுக்கு வெவ்வேறு கோணங்களில் பிரச்சனை வருவது வழக்கமான ஒன்றே ஆகும் அவ்வாறே சமீபத்தில் அஞ்சாமை என்னும் திரைப்படத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


அஞ்சாமை என்பது 2024 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழிசட்ட நாடகத் திரைப்படமாகும் இப்படத்தில் விதார்த் , வாணி போஜன் , ரஹ்மான் மற்றும் கிருத்திக் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையிலேயே இந்த படத்திற்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. 



“நீட் தேர்வை தடுக்கும் வகையிலும். நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கும் வகையிலும் உள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் ‘அஞ்சாமை' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகையை கைது செய்ய வேண்டும்" -சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் புகார்" 

Advertisement

Advertisement