• Oct 02 2025

திரை உலக நட்புகள் எனக்கு முக்கியம்...! டி.ராஜேந்தரின் உணர்ச்சிப்பூர்வமானபதிவு...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் , தனது திரை உலக அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு, நடிகர் விஜயகாந்துடன் தனது நட்பை நினைவுகூரும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த  தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


"ஒரு நிமிஷம் பேசணும் என்று நண்பர் விஜய் வந்தார். அது பஞ்சு மாதிரி – நேரடி, திறந்த மனசு," எனத் தொடங்கும் அவர், “கேப்டன் விஜயகாந்த் என் பெரிய நண்பர். ‘சட்டம் சிரிக்கிறது’, ‘கூலிக்காரன்’ படங்களுக்கு நான் இசை அமைத்தேன். ஆனால், சில பத்திரிகைகளில்  வந்த சில சர்ச்சைகளுக்கு , எங்களுக்குள் தூரம் ஏற்பட்டது,” என்றார்.


இந்த நிலையில், அவர்களது நட்பை மீண்டும் இணைத்தது அவரின் மகன் சிலம்பரசன் என்பதையும் அவர் உணர்வுடன் பகிர்ந்துள்ளார். “கேப்டனும் நம்ம அப்பாவும் இப்படி இருக்கக்கூடாது என்று என் பையன் சொன்னதால்தான், நாங்கள் மீண்டும் இணைந்தோம். என் பையன் என் நட்பை மீண்டும் ஒரு பாலமாக இணைத்தான்,” என்றார்.

அதேவேளை, அரசியல் காரணமாக தனது திரை உலக நண்பர்களை இழக்க விரும்பவில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார் “ரஜினி, கமல், விஜய் – யாராக இருந்தாலும், அரசியலுக்காக என் நட்பை பாதிக்கக்கூடாது. திரை உலகம் என் உயிருள்ள ஒரு பகுதி. இது ஒரு சின்ன உலகம் தான், ஆனா அதை நான் விலக்க மாட்டேன்," எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement