• Sep 29 2025

வெற்றிமாறனின் இயக்கத்தில் STR49 புரொமோ...!தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி வெளியீடு...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ள சிம்பு (STR), தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இது அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.


இந்த படம் ஒரு வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. சிம்பு இந்த படத்தில் இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிக்கிறார். இதற்காக அவர் தனக்கு ஏற்ற தோற்றத்தை பெற கடுமையான உடற்பயிற்சி மூலம் 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த சில நாட்களாகவே படமாக்கப்பட்டு, தற்போது அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு (செப்டம்பர் 4), ரசிகர்கள் இந்த வீடியோ வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இன்று படக்குழு ஒரு சிறப்பு புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இப்படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement